கள் விற்ற முதியவர் கைது

புளியங்குடி, ஏப். 21:  புளியங்குடியில் கள் விற்ற முதியவரை போலீசார் கைதுசெய்தனர்.

 புளியங்குடி  இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மற்றும் போலீசார் சிந்தாமணி பகுதியில் நேற்று முன்தினம்  ரோந்து சென்றனர். அப்போது வண்ணநேரி குளப்பறம்பு பகுதியில் பனை மரத்தில் இருந்து சிந்தாமணி 11வது தெருவைச் சேர்நத அருளானந்தம் (55) என்பவர் கள் இறக்கி விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்த போலீசார், அவரிடமிருந்து 2 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.
Advertising
Advertising

Related Stories: