கடையநல்லூர் அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலி

கடையநல்லூர், ஏப். 21:  கடையநல்லூர் அருகே வாகனம் மோதியதில் கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.கடையநல்லூர் அடுத்த இடைகால் துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் முருகன் (55). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கிவீசப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து வந்த இலத்தூர் போலீசார், உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த முருகனுக்கு மனைவியும், ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர். இலத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: