புளியரை அருகே விலங்குகளை வேட்டையாட கள்ள துப்பாக்கி பதுக்கியவர் கைது

செங்கோட்டை, ஏப். 21:  புளியரை அருகே விலங்குகளை வேட்டையாட புதரில் கள்ள துப்பாக்கி பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். செங்கோட்டை அடுத்த தெற்கு மேடு வனப்பகுதியில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், புளியரை எஸ்ஐ சியாம் சுந்தர், தனிப்பிரிவு ஏட்டு முத்துராஜ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய  பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாட கள்ளத் துப்பாக்கிகளுடன் மர்ம நபர்கள் நடமாடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில், தெற்கு மேடு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வேட்டையாடும்பொருட்டு தெற்கு மேட்டைச் சேர்ந்த லெனின் (36) என்பவர் கள்ளத்துப்பாக்கியை புதரில் மறைந்திருந்தது ெதரியவந்தது. இதையடுத்து கள்ளத்துப்பாக்கியை பறிமுதல் செய்த புளியரை போலீசார், இதுகுறித்து வழக்குப் பதிந்து லெனினை கைதுசெய்தனர்.

Related Stories: