பிளஸ் 2 தேர்வில் விகேபுரம் கேம்பிரிட்ஜ் பள்ளி சிறப்பிடம்

வி.கே.புரம், ஏப். 21:  பிளஸ் 2 தேர்வில் வி.கே.புரம் கேம்பிரிட்ஜ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சிபெற்று சிறப்பிடம் பெற்றனர். இப்பள்ளியில் தேர்வெழுதிய 148 மாணவர்களும் 60 சதவீத  மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். 588 மதிப்பெண்கள் மதிப்பெண்கள் பெற்றவர் சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றார். இதே போல் 574, 572, 550 மதிப்பெண்கள் என ஏராளமானோர் பெற்றனர். 500  மதிபபெண்களுக்கு மேல் 24 மாணவர்கள் பெற்றனர். வணிகவியலில்,  பொருளியியல், கணக்கு பதிவியலில் தலா ஒரு மாணவர் சென்டம் எடுத்தனர். ஆங்கிலம், வணிகவியலில் இரு மாணவர்களும், பொருளியியல், கணக்குப் பதிவியியல், கணினி  அறிவியல் பாடங்களில் தலா ஒரு மாணவர் 99 மதிப்பெண்கள்  பெற்றனர். இதே போல் ஏராளமான மாணவ, மாணவிகள் சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் ராபர்ட், முதன்மை முதல்வர்  ஆனி மெட்டில்டா, முதல்வர் பொன்மதி மற்றும் துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertising
Advertising

Related Stories: