தென்காசி கந்தசாமி நாடார் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

தென்காசி, ஏப். 21:  தென்காசி எம்.கே.வி. கந்தசாமி நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றது.இப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய  மாணவ, மாணவிகள் 172 பேரும் தேர்ச்சி பெற்றனர். மாணவி அமிர்தபாலா 558 மதிப்பெண்கள், மாணவர்கள் சுபாஷ் 532, சதீஷ்குமார் 530 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனர். கணினி அறிவியலில் மாணவி அமிர்தபாலா, ஆன்டோரோஷன் சென்டம் எடுத்தனர். இவர்களை பள்ளித் தாளாளர் பாலமுருகன், முதல்வர் அந்தோணி பால்ராஜ் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர் பாராட்டினர்.

Advertising
Advertising

Related Stories: