சிவகிரியில் நாளை வணிகர் தின மாநாடு ஆலோசனை கூட்டம்

சிவகிரி, ஏப். 21: சிவகிரி வியாபாரிகள் சங்கம் சார்பில் வணிகர் தின மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் நாளை (22ம் தேதி) நடக்கிறது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா பங்கேற்றுப் பேசுகிறார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும் மே 5ம் தேதி சென்னையில் 36வது வணிகர் தின மாநாடு நடக்கிறது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் சிவகிரி வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் நாளை (22ம் தேதி) காலை நடக்கிறது. இதில் பங்கேற்கும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்து முக்கிய ஆலோசனை வழங்கிப் பேசுகிறார். தொடர்ந்து அங்கு தனியார் பின்கார்ப் நிறுவன அலுவலகத்தை திறந்து வைக்கிறார். மாநில துணைத் தலைவர் வைகுண்டராஜா, நெல்லை மண்டல தலைவர் சுப்பிரமணியன், தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்

தலைவர் காமராஜ்  முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் சென்னையில் கட்டப்பட்டு வரும் சங்கத்தின் தலைமை அலுவலகக் கட்டிடத்திற்கு சிவகிரி வியாபாரிகள் சங்கம் சார்பில் நிதி வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை சிவகிரி வியாபாரிகள் சங்கத் தலைவர் அய்யப்பன், செயலாளர் சீதாராமன், பொருளாளர் சிதம்பர குருசாமி, துணைத் தலைவர் முனியாண்டி, துணைச்செயலாளர் சுப்பிரமணியன், கவுரவ ஆலோசகர் ரவீந்திரநாத் பாரதி  செய்து வருகின்றனர்.
Advertising
Advertising

Related Stories: