ராதாபுரம் சிவன் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலம் திரளானோர் தரிசனம்

ராதாபுரம், ஏப். 21:  ராதா

புரம்  வரகுணபாண்டீஸ் வரர் உடனுறை நித்தியகல்யாணி அம்பாள் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர். நெல்லை மாவட்டத்தில் தனிச்சிறப்புமிக்க ராதாபுரம்  வரகுணபாண்டீஸ்வரர் உடனுறை நித்தியகல்யாணி அம்பாள் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 9ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, இரவு பல்வேறு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள்  வீதியுலா நடந்தது. 12ம்தேதி இரவு அழகிய மணவாளபெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது. 16ம்தேதி காலை நடராஜர் வெள்ளை சாத்தியும்,  மாலை பச்சை சாத்தியும் அருள்பாலித்தார். விழாவின் சிகரமான தேரோட்டம் 17ம்தேதி நடந்தது. இதில் தாசில்தார் செல்வம், துணை தாசில்தார் சந்திரசேகரன், ராதாபுரம் பஞ். முன்னாள் தலைவர் மதன் மற்றும் திரளானோர் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து நிலையத்தில் சேர்த்தனர்.10ம் நாளையொட்டி இரவு 9 மணிக்கு தெப்ப உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி  அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம்வந்த சுவாமி, அம்பாளை திரளானோர் தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Advertising
Advertising

Related Stories: