பிளஸ் 2 தேர்வில் ஜீவா மாண்டிச்சோரி பள்ளி சிறப்பிடம்

ஆலங்குளம், ஏப். 21: பிளஸ் 2 தேர்வில் ஆலங்குளம் ஜீவா மாண்டிச்சோரி பள்ளி 100 % தேர்ச்சி பெற்று சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது. பள்ளி மாணவர் சஞ்சய் குமார்  கணக்கு பதிவியலில் சென்டம் பெற்றார். இதே போல் மணிஷ் ஆனந்த், அனுஷியா சிறப்பிடம் பெற்றனர். கணினி அறிவியலில் மாணவிகள் பிளன்சி, ஹேமா சென்டம் பெற்றனர். மாணவர்களை ஊக்குவித்த ஆசிரியர் சாமுவேல் உள்ளிட்டோரை தாளாளர் ராதா, முதல்வர் ஏஞ்சல் பொன்ராஜ், துணை முதல்வர் சவிதா ஷெனாய் மற்றும் ஏராளமானோர் பாராட்டினர்.

Advertising
Advertising

Related Stories: