பைக் மீது கார் மோதி டீக்கடைக்காரர் சாவு

செங்கோட்டை, ஏப். 21:  செங்கோட்டை அருகேயுள்ள கேசவபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் என்ற முருகன் (60). புளியரையில்  நடத்தி வரும்  டீக்கடைக்கு பைக்கில்  சென்றுகொண்டிருந்தார்.  வழியில் உள்ள வளைவில் திரும்பியபோது எதிரே வந்த கார், இவரது பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாலசுப்பிரமணியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கோட்டை  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.புளியரை போலீசார் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய முகமது சுதில் என்பவரை கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: