உக்கிரன்கோட்டை பேதுரு பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம்

மானூர், ஏப். 21: மானூர் அடுத்த உக்கிரன்கோட்டை தூய பேதுரு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றனர். பள்ளியில் தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் 138 பேரும் தேர்ச்சி பெற்றனர். 533 மதிப்பெண்கள் பெற்ற மருதப்புரம் மாணவி மாலவிகா, 499 மதிப்பெண்கள் பெற்ற . களக்குடி மாணவி சந்தனசிவா, 490 மதிப்பெண்கள் பெற்ற கனகா சிறப்பிடம் பெற்றனர். மாணவ, மாணவிகளை தாளாளர் பீட்டர் ஜாண், தலைமையாசிரியர்,எட்வின் மைக்கேல் தாஸ், ஆசிரியர்கள்- அலுவலர்கள் பாராட்டினர்.  இதே போல் மானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் தேர்வெழுதிய 161 மாணவ, மாணவிகளில் 155 பேர் தேர்ச்சி பெற்றனர். 530 மதிப்பெண்கள் பெற்ற மேலப்பிள்ளையார்குளம் மாணவி திவ்யபாரதி,  503 மதிப்பெண்கள் பெற்ற கீழப்பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த காளீஸ்வரி, 474 மதிப்பெண்கள் பெற்ற இசக்கியம்மாள் சிறப்பிடம் பெற்றனர். இவர்களை தலைமையாசிரியர் அருமை ஸ்மைலின். உதவித் தலைமையாசிரியர் குமாரிபிரபா உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டினர்.

Advertising
Advertising

Related Stories: