×

தொழிலாளி தூக்குபோட்டு சாவு

பாகூர், ஏப். 21:   பாகூர் அடுத்துள்ள குடியிருப்புபாளையம் பிள்ளையார்கோயில் வீதியை சேர்ந்தவர் உசேன்முகமது (46). கடலூரில் பழக்கடையில் வேலைபார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடைய இருவருக்கு சமீபகாலமாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். வேலைக்கு செல்லாதது குறித்து அவரது மனைவி பாத்திமா கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த உசேன்முகமது வீட்டில் யாரும் இல்லாதபோது, நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தகவல் அறிந்த பாகூர் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED மின் ஊழியர் பலி