தந்தை, மகனை தாக்கி கொலைமிரட்டல்

புதுச்சேரி, ஏப். 21:    தந்தை, மகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.  புதுவை அடுத்த கரசூர்காலனி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வெள்ளிக்கண்ணு. சேதராப்பட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர், வீட்டு முன் நின்றிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த பொற்செழியன் (28) என்பவர் ரகளை செய்தார். இதை வெள்ளிக்கண்ணு தட்டிக்கேட்டபோது வாய்த்தகராறு ஏற்பட்டது.  அப்போது பொற்செழியன் கல் மற்றும் கையால் வெள்ளிக்கண்ணுவை தாக்கியுள்ளார். இதனை தடுத்த அவரது மகன் டூப்ளக்சையும் தாக்கி இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வெள்ளிக்கண்ணுவின் மனைவி மாலதி, சேதராப்பட்டு காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து பொற்செழியனை தேடி வருகின்றனர்.

× RELATED வாகன விபத்தில் புது மாப்பிள்ளை பலி: தந்தை படுகாயம்