×

புதுவையில் பரபரப்பு சிறுவனை கடத்தி கஞ்சா வாலிபர் ஓரினசேர்க்கை

புதுச்சேரி, ஏப். 21: புதுவை சோலைநகரில் 6ம் வகுப்பு மாணவனை கடத்தி ஓரினசேர்க்கை செய்து சித்ரவதை செய்ததாக கஞ்சா வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுவை நகரப்பகுதியில் கடற்கரையோர கிராம பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன், 6ம் வகுப்பு படித்து வருகிறான். சம்பவத்தன்று அவன், வீட்டு முன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அவனை கஞ்சாவுக்கு அடிமையான வாலிபர் ஒருவர், ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, சோலைநகர் தோப்பில் ஓரின சேர்க்கை செய்து துன்புறுத்தி இருக்கிறார். கஞ்சா போதையில் இந்த துணிகர செயலில் அவர் ஈடுபட்டுள்ளார். வீட்டுக்கு திரும்பிய மாணவன், வலியால் துடித்துள்ளான். பெற்றோர் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை அவன் கதறியபடி தெரிவித்துள்ளான்.இதனால் பதறியடித்த பெற்றோர், இது பற்றி குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் தெரிவித்தனர். சேர்மன் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் விசாரித்து, நடந்த சம்பவம் உண்மை என தெரியவந்ததை அடுத்து, சீனியர் எஸ்பியிடம் புகார் தெரிவித்தனர். அவரது உத்தரவின்பேரில் சோலைநகர் போலீசார், போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குபதிந்து சிறுவனை வன்புணர்ச்சி செய்த கஞ்சா வாலிபரை தேடி வருகின்றனர். அதே பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி, அந்த மர்ம வாலிபரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவனை கடத்தி கஞ்சா வாலிபர் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : janitor ,
× RELATED டெல்லியில் இருந்து 5 வயது சிறுவன் தனி ஆளாக விமானத்தில் பயணம்