பூலோகநாதர் கோயிலில் 108 சங்காபிஷேகம்

நெல்லிக்குப்பம், ஏப். 21: நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோயில் பகுதியில் புகழ்வாய்ந்த புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் மற்றும் அலமேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒரே இடத்தில் நின்றபடி சிவனையும், பெருமாளையும் தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.இக்கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மழை வேண்டியும், அனைத்து நதிகளிலும் வற்றாத நீர் வேண்டியும் சிறப்பு யாகங்கள், 108 சங்காபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு கோயிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பூலோகநாதர் மற்றும் புவனாம்பிகை தாயாருக்கு இளநீர், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: