நஞ்சுண்டேஸ்வரர் கோயில் தேரோட்டம்

இடைப்பாடி, ஏப்.21: இடைப்பாடியில் உள்ள பிரசித்திபெற்ற பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று தேரோட்ட விழா நடைபெற்றது. முதலாவதாக விநாயகர் தேர் இழுத்து வரப்பட்டது. இதையடுத்து, பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர்-தேவகிரி அம்மன் தேரும், 3வதாக பாலசுப்ரமணிய சுவாமி-வள்ளி, தெய்வானை தேரும் நிலை பெயர்ந்தது. விழாவில், சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேர்வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர்.

Related Stories: