2வது நாளாக மழை இடைப்பாடியில் 5 ஆயிரம் வாழை நாசம்

இடைப்பாடி, ஏப்.21:  இடைப்பாடியில் 2வது நாளாக பெய்த மழைக்கு 5 ஆயிரம் வாழைமரங்கள் நாசமடைந்தது. இடைப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 18ம் தேதி மழை பெய்தது. இதேபோல், நேற்று முன்தினம் இரவும், 2வது நாளாக இடைப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 8மணி முதல் 10 மணி வரை 2 மணிநேரம் கனமழை பெய்தது. தேவூர், அரசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட செட்டிப்பட்டி, பொன்னம்பாளையம், புள்ளாகவுண்டம்பட்டி, காவேரிப்பட்டி, கல்வடங்கம், கோனேரிப்பட்டி, அக்ரஹாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைகாற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. கோனகலுத்தானூர் பகுதியைச் சேர்ந்த ராஜீ என்பவரது விவசாய தோட்டத்தில் இருந்த 1,500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சூறைகாற்றுக்கு சாய்ந்து சேதமடைந்தது. இதேபோல், கோனேரிப்பட்டியில் 500 வாழைமரங்களும், கல்வடங்கம் பகுதிகளில் 700 வாழை மரங்களும் என மொத்தம் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நாசமடைந்தன. இதேபோல், விவசாயிகள் பயிரிட்டிருந்த சோளம், பருத்தி செடிகளும் நாசமடைந்தது. சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழையால் சேதமடைந்த பகுதிகளை நேற்று காலை தேவூர் வருவாய் ஆய்வாளர் முனிசிவ பெருமாள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: