நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிகம் வாக்களித்துள்ளனர்

நாமக்கல், ஏப்.21:  நாமக்கல்லில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட பெண்களே அதிகம் வாக்களித்துள்ளனர்.நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில், கடந்த 18ம் தேதி வாக்கு பதிவு நடந்தது. சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர் மற்றும் திருச்செங்கோடு என 6 சட்டமன்ற தொகுதிகளிலும், 5,55,803 ஆண்களும், 5,73,764 பெண்களும், 43 திருநங்கைகளும் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். திருநங்கைகளில் 50 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை. நாமக்கல் தொகுதியில் மொத்தம் 111 திருநங்கைகள் உள்ளனர். இவர்களில் 43 பேர் மட்டுமே, தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் 13 பேரில் 6 பேரும், சேந்தமங்கலம் தொகுதியில் 17 பேரில் 8 பேரும், நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 38 பேரில் 18 பேரும், பரமத்திவேலூரில் 6 பேரில் ஒருவரும், திருச்செங்கோடு தொகுதியில் 36 பேரில் 9 பேர் மட்டுமே தங்களது வாக்குளை பதிவு செய்துள்ளனர்.

× RELATED நாமக்கல் அருகே அதிக பாரம் ஏற்றிய 2 லாரிகள் பறிமுதல்