×

சேலம், நாமக்கல்லில் பிஎஸ்என்எல் அதிவேக பைபர் இணைப்புகள்

நாமக்கல், ஏப்.21:சேலம், நாமக்கல் தொலைத்தெடர்பு மாவட்டத்தில் இதுவரை 650க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் பைபர் கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிஎஸ்என்எல் பைபர் கேபிள் இணைப்பு மூலமாக அதிவேகத்தில்(500mpps) இயங்கும் இன்டர்நெட் சேவையை வீடுகளுக்கு வழங்கி வருகிறது. இதற்காக கடந்த இரண்டு மாதமாக இந்த நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தொலைபேசி நிலையத்தில் இருந்து வீடுகளுக்கு பைபர் கேபிள் இணைப்பு கொடுக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.  இதுகுறித்து பிஎஸ்என்எல்., அதிகாரிகள் கூறுகையில், “சேலம், நாமக்கல் தொலைதொடர்பு மாவட்டத்தில் பைபர் கேபிள் இணைப்பு மூலமாக அதிவேக இணைப்பு கொடுக்கப்படுகிறது. இதில், 25(mpps) வேகம் முதல், 200(mpps) வேகம் வரை கிடைக்கும். இதற்காக, ₹577 முதல் ₹1,999 வரையில் பல்வேறு திட்டங்களை பிஎஸ்என்எல்., நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில், மாதத்திற்கு 200 ஜிபி., முதல் 1,500 ஜிபி., வரை கிடைக்கும். சேலம், நாமக்கல் தொலை தொடர்பு மாவட்டத்தில் இதுவரை 650க்கும் மேற்பட்ட இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

Tags : BSNL ,Namakkal ,Salem ,
× RELATED பிஎஸ்என்எல் சேவையில் திடீர்...