திருச்செங்கோட்டில் 3,200 மூட்டை மஞ்சள் ₹1.50 கோடிக்கு விற்பனை

திருச்செங்கோடு, ஏப்.21: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 3,200 மூட்டை மஞ்சள் ₹1.50 கோடிக்கு விற்பனையானது. ஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூர், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர், நாமக்கல், மேட்டூர், பூலாம்பட்டி பகுதிகளிலிருந்து, விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த மஞ்சளை கொள்முதல் செய்ய ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலத்திலிருந்து 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். டெண்டர் மூலம் ₹1.50 கோடிக்கு மஞ்சள் விற்பனையானது. விரலி ரகம் குவிண்டாலுக்கு ₹7,240 முதல் ₹9,266 வரையும், கிழங்கு ரகம் ₹6,899 முதல் ₹7,509 வரையும், பனங்காளி ₹11,899 முதல் 15,209 வரையும் விற்பனையானது. விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.

× RELATED திருச்செங்கோடு அருகே போலி காசோலை கொடுத்து மூதாட்டியிடம் ₹2800 மோசடி