×

நாமக்கல்லில் 156 மி.மீ மழை பதிவு

நாமக்கல், ஏப்.21:  நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நாமக்கல் பகுதியில் இரவு 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை, இரவு 11 மணி வரை நீடித்தது. கடந்த இரண்டு மாதமாக நாமக்கல் பகுதியில் கடுமையான வெப்பம் வீசி வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் பெய்த கோடை மழை, மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. நேற்று காலை 6 மணி வரை மாவட்டத்தில் பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்): எருமப்பட்டி 30 மி.மீ, குமாரபாளையம் 17 மி.மீ, மோகனூர் 5 மி.மீ, நாமக்கல் 25 மி.மீ, பரமத்திவேலூர் 38 மி.மீ, ராசிபுரம் 17 மி.மீ, சேந்தமங்கலம் 2 மி.மீ, திருச்செங்கோடு 22 மி.மீ பதிவாகியுள்ளது.


Tags : rainfall ,Namakkal ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...