சித்திரைத் தேர்விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருத்தேர் ஸ்தம்ப ஸ்தாபனம் நாளை நடக்கிறது

திருச்சி, ஏப்.21: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேர் திருவிழாவை முன்னிட்டு நாளை திருத்தேர் ஸ்தம்ப ஸ்தாபனம் நடைபெற உள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு தோறும் ஏதேனும் திருவிழாக்கள் நடந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் சித்திரைத்தேர் திருவிழா மே மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9.30 மணியிலிருந்து 10.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருத்தேர் ஸ்தம்ப ஸ்தாபனம்  நிகழ்ச்சி நடக்கிறது.

இதற்காக தேரை சுற்றியுள்ள கண்ணாடிக்கூண்டுகள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்து, மேற்கூரை அமைக்கப்படும். மே 3ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி வில்லிப்புத்தூர் நாச்சியார் (ஆண்டாள்) கோயிலிலிருந்து மே 2ம் தேதி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை (பட்டு பரிவட்டங்கள்) இக்கோயில் நிர்வாகத்தினரிடம் வழங்கப்படும். ரங்கவிலாச மண்டபத்தில் வஸ்திரம் மற்றும் மங்கலப் பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து சகல மரியாதைகளுடன் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Related Stories: