துறையூர் பகுதியில் திடீர் மழை

துறையூர், ஏப்.21:  துறையூர் தாலுகாவில் கடந்த சில மாதமாக கடுமையான வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை  துறையூரில்  1 மணி நேரம் மழை பெய்தது. துறையூர் அதன் சுற்றுப்புற பகுதிகளான காளிப்பட்டி, அம்மாபட்டி, சிங்களாந்தபுரம், இதுபோல உப்புலியபுரம், கோட்டப்பாளையம் ஆகிய பகுதிகளில் வெப்பசலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertising
Advertising

Related Stories: