ஏற்ற மறுத்த அரசு பஸ்களை மாணவர்கள் சிறைப்பிடிப்பு மணப்பாறையில்

பரபரப்புமணப்பாறை, ஏப்.21:  மணப்பாறை பஸ் நிலையத்தில் ஏற்ற மறுத்த அரசு பஸ்களை சிறைப்பிடித்து மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மணப்பாறை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் திருச்சியில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. மணப்பாறை பஸ் நிலையத்திலிருந்து காலை வேளையில் 3 பஸ்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மாணவ, மாணவிகள் நலன் கருதி இயக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை அந்த பஸ்கள் வர தாமதமானதால், திண்டுக்கல் மற்றும் தேனி, பழனி உள்ளிட்ட இடங்களிலிருந்து மணப்பாறை வழியாக திருச்சி செல்லும் பஸ்களில் மாணவ, மாணவிகள் ஏற முற்பட்டபோது அந்த பஸ்சின் கண்டக்டர் அனுமதிக்க மறுத்துவிட்டார். இதனால், கல்லூரிக்கு செல்ல தாமதமாகிவிடும் என கருதி பஸ் நிலையத்திலிருந்து வெளியே செல்ல முயன்ற பஸ்களை சிறைப்பிடித்து மாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த மணப்பாறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மாற்று பேருந்து மூலம் மாணவர்களை அனுப்பி வைத்தனர். இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: