×

மன்னார்குடியில் மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டி மோதி மூதாட்டி பரிதாப சாவு

மன்னார்குடி, ஏப். 21: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கைலாசநாதர் கோயில் பகுதியை சேர்ந்தவர் அமிர்தவள்ளி (80). இவரின் கணவர் தெட்சிணாமூர்த்தி தற்போது உயிரோடு இல்லை. அமிர்தவள்ளி முதுமை காரணமாக தனது மகன் ராஜேந்திரன் வீட்டில் வசித்து வந்தார்.இந்நிலையில் அமிர்தவள்ளி நேற்று காலை தனது மகன் ராஜேந்திரன் வீட்டில் இருந்து வெளியே வந்து வாசலில் நின்று கொண்டிருந்தார்.  அப்போது அந்த வழியே மணல் ஏற்றிக் கொண்டு வந்த டயர் மாட்டு வண்டி மூதாட்டி மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மூதாட்டி மீது மாட்டு வண்டியின் டயர்  ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து விபத்தில் அமிர்தவள்ளியின் மகன் ராஜேந்திரன் மன்னார்குடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து மணல் வண்டியை பறிமுதல் செய்து அதனை ஒட்டி வந்த சக்தியை கைது செய்தார்.

Tags : Mannargudi ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில்...