வாக்குப்பதிவு இயந்திரம் பழுது தாமதத்தால் வாக்காளர்கள் அவதி

கோவை, ஏப். 19:

கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட பல வாக்குசாவடிகளில் வாக்குபதிவு இயந்திரங்கள் பழுதானதால் வாக்களிக்க தாமதம் ஆனது. இதனால் வாக்காளர்கள் அவதியடைந்தனர்.கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட பல வாக்குசாவடிகளில் இயந்திரங்கள் பழுதானது. சூலூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச் சாவடி எண் 155ல் ஒரு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து உடனடியாக வந்த அலுவலர்கள் அதை சரி செய்தனர். அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு தொடங்கியது.

*. அதே போல் வெள்ளலூர் அரசு பள்ளியில் வாக்குபதிவு இயந்திரம் பழுதானதால் சுமார் ஒரு மணி நேரம் வாக்குபதிவு பாதிப்படைந்தது. அதன் பின் மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டதை அடுத்து வாக்குபதிவு நடந்தது.

*. கோவை வடக்கு தொகுதி பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில்  13ம் நம்பர் பூத்தில் காலையில் இயந்திரம் வேலை செய்யவில்லை. அதிகாரிகள் வைத்திருந்த வாக்காளர் பட்டியலிலும் குளறுபடி இருந்துள்ளது. இவை சரி செய்யப்பட்ட பின்பு அரை மணி நேரம் தாமதமாக வாக்களித்தனர்.

*. கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி பள்ளியில் 228வது  வாக்குசாவடியில் நேற்று மதியம் 4 வாக்குபதிவு இயந்திரங்கள்  பழுதானது.  இதையடுத்து சுமார் 1 மணி நேரத்திற்கு பின் இயந்திரம் சரிசெய்யப்பட்டு  வாக்குபதிவு நடந்தது.

Related Stories: