‘‘என் ஓட்டை யாரோ போட்டுட்டாங்க’’

கோவை, ஏப்.19: கோவை போத்தனூர் அருகே உள்ள சித்தண்ணபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(23). சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் நேற்று காலை 11 மணியளவில் சித்தண்ணபுரத்தில் உள்ள வாக்குசாவடிக்கு ஓட்டு போட சென்றார். அவருடைய ஆவணங்களை சரிபார்த்த தேர்தல் ஊழியர்கள் உங்களுடைய ஓட்டு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டது என கூறினர். இதனை சற்றும் எதிர்பாராத ராஜேஷ் தன்னுடைய கை விரலை காட்டி தான் இன்னும் ஓட்டு போடவில்லை என்று தெரிவித்தார். அப்போதுதான் அவருடைய ஓட்டை யாரோ ‘கள்ள ஓட்டு’ போட்டது ஊழியர்களுக்கு தெரியவந்தது. இது குறித்து ராஜேஷ் கூறுகையில், ‘‘ வாக்குசாவடி அலுவலர்களின் அலட்சியத்தால் இந்த தவறு நடந்துள்ளது. இது குறித்து அவர்களிடம் கேட்ட போது முறையான பதில் அளிக்க வில்லை. எனவே இது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்க உள்ளேன். எனது வாக்கினை செலுத்தாமல் விடமாட்டேன்’’. என்றார்.

Advertising
Advertising

Related Stories: