கோவை மக்களவை தொகுதியில் 64 சதவீதம் வாக்கு பதிவு

கோவை, ஏப்.19: கோவை மக்களவை தொகுதியில், 2045 ஓட்டு சாவடி அமைக்கப்பட்டிருந்தது. 2,605 ஓட்டு மெஷின்கள் மூலமாக நேற்று ஓட்டு பதிவு நடந்தது. 14 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். காலை முதல் மாலை வரை ஓட்டு பதிவு சீராக நடந்தது. மொத்தமாக 19,58,577 வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில், 12,53,378 பேர் ஓட்டு போட்டனர். 7,05,199 பேர் ஓட்டு போடவில்லை. மொத்தமாக 64 சதவீத ஓட்டு பதிவானது. 6 சட்டமன்ற தொகுதிகளில் காலை 9, 11, மதியம் 1, 3, 5 மணி ஓட்டு பதிவு நிலவரங்களை பெறுவதிலும் மாவட்ட நிர்வாகம் மந்தமாக செயல்பட்டது. இரவு 11 மணி கடந்த பின்னரும் சட்டமன்ற தொகுதி வாரியாக ஓட்டு பதிவு நிலவரங்களை தேர்தல் பிரிவினரால் கணக்கிட முடியவில்லை. இரவு 8 மணி வரை பல்வேறு ஓட்டு சாவடிகளில் ‘டோக்கன்’ ெகாடுத்து ஓட்டு பதிவு நடந்தது. மழை, இடி மின்னல் காரணமாக சில ஓட்டு சாவடிகளில் மின்சாரம் தடைபட்டது. இதனால் ஓட்டு பதிவு நிலவரங்களை கணக்கிட முடியவில்லை என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.  உத்தேச ஓட்டு பதிவு விவரங்களை மட்டும் குறிப்பிடுங்கள்.

நாளை(இன்று) காலை 11 மணிக்கு பிறகு ஓட்டு பதிவு குறித்த தகவல்களை வெளியிடுகிறோம் என தெரிவித்தனர். அமைதியான வாக்குப்பதிவு:கோவை மக்களவை தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான ராசாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கோவை,  பொள்ளாச்சி மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் அமைதியான முறையில் நடந்து  முடிந்துள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்னை எங்கும் இல்லை. இதற்கு முழுமையாக  ஒத்துழைப்பு அளித்த அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், தேர்தல் பணியில்  ஈடுபட்ட ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் துணை  ராணுவத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியையும், பாராட்டுக்களையும்  தெரிவித்துக்கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.

Related Stories: