102 வயதில் வாக்களிக்க வந்த மூதாட்டி

ஈரோடு, ஏப். 19: ஈரோடு வில்லரசம்பட்டி செம்மாம்பாளையம் பகுதியை சேர்ந்த குமரன் மனைவி அருக்காணி (102). இவர், அவரது மகன்கள் மற்றும் பேரன்கள் பராமரிப்பில் வசித்து வருகிறார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவிற்காக அருக்காணி அவரது இளைய மகன் அன்பு செல்வன் உதவியுடன் ஈரோடு செங்கோடம்பள்ளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று வாக்களிக்க வந்தார். அருக்காணியின் வாக்காளர் அடையாள அட்ைடயை பார்த்து 102 வயது என்றவுடன் வாக்குசாவடி மையத்தில் இருந்த அதிகாரிகள் வியப்படைந்து, அவருக்கு வாக்களிக்க உதவி செய்தனர். இதைத்தொடர்ந்து, மூதாட்டி அருக்காணி தனது வாக்கினை பதிவு செய்து வீடு திரும்பினார். இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள் இந்த வயதிலும் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளதை பார்த்து வியந்தனர்.

பூத் சிலிப் இல்லாததால் வாக்காளர்கள் அவதிவாக்காளர்களின் வாக்குசாவடி அமைவிடம், வாக்கு சாவடி எண், வரிசை எண், பாகம் எண் உள்ளிட்ட விபரம் அடங்கிய பூத் சிலிப் கடந்த 15 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் வீடு வீடாக சென்று அதிகாரிகள் வழங்கி வந்தனர். இதில், ஊரக பகுதிகளில் பெரும்பாலான வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்ட நிலையில் ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பெரும்பாலான வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படாததால்  அவதிக்குள்ளாகினர்.பூத் சிலிப் இல்லாதவர்கள் அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பூத் சிலிப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டபோதும் பொதுமக்களுக்கு முறையாக அறிவிப்பு செய்யாததால் சிரமம் அடைந்தனர். இதேபோல, பூத் சிலிப் பெற்றுக்கொண்ட வாக்காளர்களில் சிலர் பூத் சிலிப் மட்டும் இருந்தால் போதும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தேவையில்லை என வாக்களிக்க வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் வேறுவழியின்றி வீட்டிற்கு சென்று உரிய ஆவணங்களை கொண்டு வந்த வாக்களித்தனர்.

Related Stories: