வாக்களிக்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்

பெரம்பூர்: வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக மாநகராட்சி சார்பில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், வியாசர்பாடி, கொடுங்கையூர், பெரம்பூர், தண்டையார்பேட்டை, காசிமேடு, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், கொளத்தூர், புளியந்தோப்பு, தங்கசாலை, பாரிமுனை உள்ளிட்ட பகுதி மக்கள் நேற்று வாக்குச்சாவடிக்கு வந்தனர்.

அங்கும், பூத் சிலிப் வழங்க யாரும் இல்லை. இதையடுத்து, வாக்காளர் அடையாள அட்டையை வைத்து ஓட்டுபோட சென்றபோது அங்கிருந்த அலுவலர்கள், பூத் சிலிப் இருந்தால்தான் ஓட்டுபோட முடியும் என்று திருப்பி அனுப்பினர்.தண்டையார்பேட்டை கருணாநிதி நகர், காசிமேடு பகுதி வாக்குச்சாவடி மையத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. பெரம்பூர், ராயபுரம், ஆர்.கே.நகர் பகுதிகளில் ஒருசில பூத்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. பழுது நீக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியதால் சிறிது நேரம் வாக்காளர்கள் சிரமப்பட்டனர்.

Related Stories: