வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் அதிகாரிகளை கண்டித்து மக்கள் மறியல்

பெரம்பூர்: வடசென்னை பகுதியில் ஓட்டுப்போடுவதற்காக மக்கள் நேற்று காலை முதல் வாக்குச் சாவடிகளுக்கு வந்தனர். இங்கு, பெரும்பாலான மையங்களில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதுபோல் பெரும்பாலானவர்களுக்கு பூத் சிலிப் கிடைக்கவில்லை. வாக்காளர் பட்டியலிலும் பலரது பெயர்கள் இல்லை.இந்தநிலையில் ஓட்டுப்போடுவதற்காக வண்ணாரப்பேட்டை டி.எச். ரோட்டில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வாக்காளர்கள் வந்தனர். அங்கு பலரின் பெயர்கள் பட்டியலில் இல்லாததால் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தேர்தல் அலுவலர்களிடம் கேட்டபோது முறையான பதில் கூறாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வண்ணாரப்பேட்டை பரசுராமன் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள், ஓட்டுபோட வந்தனர். இவர்களில் பலரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அதிகாரிகளை கண்டித்து வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகில் மறியலில் ஈடுபட்டனர்.

இதேபோல், வண்ணாரப்பேட்டை  பரசுராமன் தெரு, பார்த்தசாரதி தெரு ஆகிய பகுதைகளை சேர்ந்த முஸ்லிம்  சமூகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரின் வாக்குகள்  மொத்தாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. இதனால் அந்தப்பகுதி மக்கள்  தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து  வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே  சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

Related Stories: