தேர்தல் ஆணையத்துக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

ஆலந்தூர்: நங்கநல்லூர் தில்லை கங்கா நகரில் உள்ள ஜெகதாம்பாள் பள்ளியில் உள்ள  வாக்குசாவடியில் திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி நேற்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தேர்தல் ஆணையம் மக்களுக்கு பாகம் மற்றும் வரிசை எண்களுடன் கூடிய பூத் சிலிப்பை சரிவர வழங்கவில்லை. இதுபற்றி தலைமை தேர்தல் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கப்படும், என்றார்.
Advertising
Advertising

பல இடங்களில் பூத் சிலிப் வழங்காததால் மக்கள் வாக்களிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். தங்களுக்கான ஓட்டை கண்டுபிடிக்க மிகவும் சிரமப்பட்டனர். தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் கண்டிக்கத் தக்கது,’’ என்றார்.

Related Stories: