×

ேதவாலயங்களில் புனித வியாழன் வழிபாடு

தஞ்சை, ஏப். 19: தஞ்சை மாவட்ட தேவாலயங்களில் புனித வியாழன் வழிபாடு நேற்று நடந்தது. இயேசு  பாடுபடுவதற்கு முன்னர் தமது சீடர்களுடன் அமர்ந்து இரவு பாஸ்கா விருந்து  உண்டு தனது சீடர்களின் பாதங்களை கழுவிய நாளை தான் உலகில் உள்ள  கிறிஸ்தவர்கள் புனித வியாழனாக கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினத்தில்  கிறிஸ்தவர்கள் தேவாலயத்துக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்துவது  வழக்கம். இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில்  புனித வியாழன் சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. தஞ்சை திருஇருதய  பேராலயத்தில் புனித வியாழன் கூட்டு திருப்பலி மறைமாவட்ட ஆயர் தேவதாஸ்  அம்புரோஸ் தலைமையில் நடந்தது. முன்னதாக பேராலய வளாக மேடையில் 12 முதியோரின் பாதங்களை ஆயர்  கழுவினார். தொடர்ந்து மறையுரை, கூட்டுபாடல் திருப்பலி நடந்தது.

Tags : shrines ,
× RELATED நுளம்பர் பாணி நுணுக்கத்தூண்கள்