×

தஞ்சை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை பகுதியில் விறுவிறு வாக்குப்பதிவு

பட்டுக்கோட்டை, ஏப். 19: தஞ்சை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்களாக 2,33,664 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 1,12,355, பெண்கள் 1,21,288, மூன்றாம் பாலினத்தவர் (மற்றவர்கள்) 21 பேராகும். பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 271 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் 13 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டது. பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி முழுவதும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. காலை 9 மணி வரை பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 4.27 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. காலை 9 முதல் 11 மணி வரை 26.32 சதவீத வாக்குகள் பதிவானது.

காலை 11 முதல் மதியம் 1 மணி வரை 47.64 சதவீத வாக்குகள் பதிவானது. மதியம் 1 முதல் 3 மணி வரை 59.12 சதவீத வாக்குகள் பதிவானது. மாலை 3 முதல் 5 மணி வரை சதவீத வாக்குகள் பதிவானது. மாலை 6 மணி வரை ------ சதவீத வாக்குகள் பதிவானது. பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் காலை 7 முதல் 11 மணி வரை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. பட்டுக்கோட்டை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பூங்கோதை, தாசில்தார் அருள்பிரகாசம் ஆகியோர்  வாக்குச்சாவடிகளை பார்வையிட்டனர். பதற்றமான 13 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : area ,Pattukottai ,constituency ,Tanjore Lok Sabha ,
× RELATED மனநலம் பாதித்தவர் தாக்கியதில் 2 கண்களை...