திருச்சி மத்திய சிறை அதிகாரியிடம் வாக்களிக்க விருப்பமில்லை என்று எழுதி தந்த 8 குண்டாஸ் கைதிகள்

திருச்சி, ஏப். 19:  திருச்சி மத்திய சிறையில் 1,400க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 40க்கும் மேற்பட்டோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர். இதில் மக்களவை தேர்தலில் சிறையில் உள்ளவர்களில் குண்டர் சட்டத்தின் கீழ் ைகது செய்யப்பட்டவர்கள் தகுதியானவர்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த குண்டாஸ் கைதிகளில் 8 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என கண்டறிந்து அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. மேலும் அதற்கான பூத்சீட்டும் நேற்று அவர்களிடம்  வழங்கப்பட்டது. ஆனால் 8 கைதிகளும் தங்களுக்கு தேர்தலில் வாக்களிக்க விருப்பமில்லை என சிறை அதிகாரியிடம் எழுத்துப் பூர்வமாக எழுதி கொடுத்தனர்.

Advertising
Advertising

Related Stories: