திருச்சியில் ஆர்வத்துடன் வாக்களித்த விஐபிக்கள்

திருச்சி, ஏப்.19:   திருச்சி மக்களவை தொகுதியில் விஐபிக்கள் ஆர்வத்துடன் நேற்று வாக்களித்தனர்.  திருச்சி கலெக்டர் சிவராசு காஜாமலை அல்ஜம்லேதிஸ் சாதிக் மெட்ரிக் பள்ளியிலும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எம்எல்ஏ, தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நேற்று காலை வாக்களித்தனர். திமுக எம்பி சிவா தனது மகன், மருமகள் என குடும்பத்தினருடனும், அமமுக வேட்பாளர் சாருபாலா ெதாண்டைமான் தனது கணவர், மகன், மகள் என குடும்பத்தினருடனும் வெஸ்ட்ரி பள்ளியில் வாக்களித்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் காஜாமியான் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பாலக்கரை பள்ளியில், அமைச்சர் வளர்மதி உறையூர் எஸ்.எம்.பள்ளியில், அதிமுக எம்பிக்கள் குமார் காஜாமலை மலையடிவாரம் அல்ஜமாதீஸ் மெட்ரிக் பள்ளியிலும், ரத்னவேல்எம்பி, காஜாமலை சந்திரா நடுநிலைப்பள்ளியிலும் வாக்களித்தனர்.

Related Stories: