ரங்கத்தில் பலத்த காற்று, மழையால் மின்தடை பேட்டரி மூலம் இயங்கிய வாக்குப்பதிவு இயந்திரம் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் பரபரப்பு

திருச்சி, ஏப், 20:   ரங்கம் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த 93 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. இந்நிலையில் நேற்று மாலை ஸ்ரீரங்கத்தில்  பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் தெற்கு சித்திரை வீதியில் இருந்த இரண்டு வேப்ப மரங்கள் அடியோடு சாய்ந்ததில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின்கம்பங்கள் சேதம் அடைந்தது.  இதேபோல் பலத்த காற்றால் ராஜகோபுரம் எதிரே மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. உடனே அசாம்பவிதம் ஏற்படாத வகையில் அங்கிருந்தவர்களால் மின்கம்பியை சுற்றி பேரிகார்டு மற்றும் பிளக்ஸ் போர்டுகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தினர். பின்னர் மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அறுந்துகிடந்த மின்கம்பிகளை சீரமைத்தனர்.  

மாலை 4.30மணி அளவில் சென்ற மின்சாரம் வாக்குப்பதிவு முடியும் நேரமான மாலை 6 மணி வரை வரவில்லை. முன்னேற்படாக ஏற்கனவே வாக்கு பதிவு இயந்திரங்களில் பேட்டரி மூலம் சார்ஜ் ஏற்றப்பட்டிருந்தால் வாக்குப்பதிவு எவ்வித தடங்களின்றி நடந்தது. மழையால் மக்கள் மகிழ்ச்சி

திருச்சி மாவட்டத்தில் துவாக்குடி மற்றும் திருவெறும்பூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் லேசான மழை பெய்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை 4 மணிவரை திருச்சி மாநகரில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை திடீரென வானம் மேகமூட்டத்துடன் இருண்டது. தொடர்ந்து பலத்த காற்று வீசியது. இதனால் ஒரு சில இடங்களில் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பலத்த காற்றிற்கிடையே சத்திரம் மற்றும் மத்திய பஸ் நிலைய பகுதிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: