முதல்வர் தொகுதியில் ஓட்டு போடாத 46,668 வாக்காளர்கள்

சேலம், ஏப்.19: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியான இடைப்பாடி தொகுதியில், 2 லட்சத்து 74ஆயிரத்து 15  வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் நேற்று 2 லட்சத்து 27 ஆயிரத்து 347 பேர் மட்டுமே ஓட்டுப்போட்டுள்ளனர். 46 ஆயிரத்து 668 பேர் வாக்களிக்காமல் புறக்கணித்து விட்டனர். அதே போல சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 16 லட்சத்து 11 ஆயிரத்து 982 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 12 லட்சத்து 46 ஆயிரத்து 483 பேர் ஓட்டுப்போட்டுள்ளனர். 3 லட்சத்து 65ஆயிரத்து 499 பேர் ஓட்டுப்போடாமல் புறக்கணித்து விட்டனர்.

Related Stories: