மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19 கனஅடி

மேட்டூர், ஏப்.19: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று விநாடிக்கு 19 கனஅடியாக சரிந்தது. காவிரி  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து  மிகவும் குறைவாகவே உள்ளது. நேற்று முன்தினம் 88 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை  நிலவரப்படி விநாடிக்கு  19 கனஅடியாக சரிவடைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக  விநாடிக்கு 1,000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 500  கனஅடியும், தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வரத்தை விட தண்ணீர் திறப்பு  அதிகளவில் உள்ளதால், அணை நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 55.13  அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 54.92 அடியாக சரிந்தது. நீர் இருப்பு  21.05 டிஎம்சியாக உள்ளது.

Advertising
Advertising

Related Stories: