8 வழிச்சாலை பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை

மேட்டூர், ஏப்.19: 8 வழிச்சாலை பற்றி பேசவேண்டிய அவசியமே இல்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மேட்டூர் சட்டமன்ற தொகுதியில், 315 வாக்குச்சாவடிகளில் 2,74,372 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது கிராமங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். மேச்சேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவினை பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘விவசாயிகளின் ஆதரவு எங்களுக்கு அதிகம் உள்ளது. வலிமையான இந்தியா, வளமான தமிழகம் அமைய மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்,’ என்றார்.

Advertising
Advertising

நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்ட 8 வழி சாலையை அமைத்தே தீருவோம் என்று மத்திய அமைச்சர் நிதி கட்கரி கூறி உள்ளாரே என்று கேட்டபோது, அது பற்றி(விவசாயிகள் பற்றி) பேசவேண்டிய அவசியமே இல்லை என கூறிவிட்டு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை முடித்துக்கொண்டார். 8 வழிச்சாலை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியது, விவசாயிகள் மத்தியில் கடும் அதிப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: