மணக்கோலத்தில் ஓட்டு போட வந்த புதுமணத்தம்பதி

ஓமலூர், ஏப்.19: ஓமலூர் அருகே புளியம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் நடராஜன். இவருக்கும், ஏற்காட்டை சேர்ந்த சுரேஷ் மகள் ஷாலினிக்கும், நேற்று காலை ஓமலூர் அருகே சின்னத்திருப்பதி கோயிலில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையுடன் மாலையும், கழுத்துமாக புளியம்பட்டி வாக்குச்சாவடி மையத்திற்கு மணமக்கள் வந்தனர். இந்த வாக்குச்சாவடியில் நடராஜூக்கு மட்டுமே வாக்கு உள்ளதால் அவர் வரிசையில் நின்று வாக்களித்தார். இதையடுத்து, இருவரும் உடனடியாக காரில் ஏற்காட்டிற்கு கிளம்பிச் சென்று, ஷாலினி வாக்களித்தார். அதற்கு பிறகே மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களுக்கு திருமணம் நடந்ததும் வரவேற்பு  நிகழ்ச்சிக்கு கூட செல்லாமல் நேராக வாக்களிக்க வந்துவிட்டோம். எந்த  சூழ்நிலையிலும் எங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி  என்று தெரிவித்தனர். அதேபோல், வாழப்பாடி அருகே தூக்கியாம்பாளையத்தைச் சேர்ந்த ராஜராஜன்-நந்தினிதேவி ஆகியோரது திருமணம் அங்குள்ள கோயிலில் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு, ராஜராஜன் தனது புது மனைவியுடன் துக்கியாம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தாார்.

Related Stories: