நாமக்கல் நாடாளுமன்ற ெதாகுதியில் 79.98 சதவீத வாக்குப்பதிவு

நாமக்கல்,  ஏப். 19: நாமக்கல் நாடாளுமன்ற தொகுதயில் உள்ள 1653 வாக்குசாவடிகளில்  நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குபதிவு இரவு 6  மணிக்கு முடிவடைந்தது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 25 வாக்கு சாவடிகளில்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக, சுமார் 20 நிமிடம்  வாக்குப்பதிவு தாமதமாக நடைபெற்றது. பெரும்பாலான வாக்கு சாவடிகளில்  காலை 7  மணிக்கே பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். மாவட்டம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

மாலை  6 மணிக்கு மேல் வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு வாக்குசாவடி அலுவலர்கள்  அரசியல் கட்சி ஏஜென்டுகள் முன்னிலையில் சீல் வைத்தனர்.
பின்னர் அவை போலீஸ்  பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான திருச்செங்கோடு விவேகானந்தா  பொறியியில் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.இந்த தேர்தலில் மாலை 6 மணி வரை 79.98 சதவீத வாக்குகள் பதிவானது.நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் காலை 9 மணிவரை சங்ககிரியில் 8.91 சதவீதம், ராசிபுரம் 10,சேந்தமங்கலம்  6.60, நாமக்கல் 10.68, பரமத்திவேலூர் 5.63, திருச்செங்கோடு 10.74 சதவீதம்  வாக்குகள் பதிவாகி இருந்தது.

காலை 11 மணியளவில் சங்ககிரியில் 27.10  சதவீதம், ராசிபுரம் 28.19, சேந்தமங்கலம் 27.13, நாமக்கல் 33.27,  பரமத்திவேலூர் 21.79, திருச்செங்கோடு 25.53 சதவீதம் வாக்குகள் பதிவானது.மதியம்  1 மணியளவில் சங்ககிரியில் 49.24 சதவீதமும், ராசிபுரம் 45.50, சேந்தமங்கலம்  49.56, நாமக்கல் 51.07, பரமத்திவேலூர் 43.39, திருச்செங்கோடு 43.62  சதவீதம் வாக்குகள் பதிவானது. தொடர்ந்து மதியம் 3 மணியளவில் சங்ககிரியில்  63.18 சதவீதமும், ராசிபுரம் 58.39, சேந்தமங்கலம் 62.50, நாமக்கல் 64.24,  பரமத்திவேலூர் 60.24, திருச்செங்கோடு 59.64 சதவீதம் வாக்குகள் பதிவானது.

மாலை  5 மணியளவில் சங்ககிரியில் 69.70 சதவீதமும்,  ராசிபுரம் 65.21,  சேந்தமங்கலம் 70.90, நாமக்கல் 74.11, பரமத்திவேலூர் 72.04,  திருச்செங்கோடு  71.53 சதவீதமும், மாலை 6 மணிக்கு வாக்கு பதிவு நிறைவடைந்த நிலையில்   சட்டமன்ற தொகுதிவாரியாக சங்ககிரியில்  82.07 சதவீதமும், ராசிபுரத்தில்  81.21, சேந்தமங்கலம்  80.88, நாமக்கல்  77.46, பரமத்திவேலூர்  80.25,  திருச்செங்கோடு 77.84 சதவீதமுமாக, நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில்  மொத்தமாக 79.98 சதவீத வாக்குகள் பதிவானது.

× RELATED நாமக்கல் அருகே அதிக பாரம் ஏற்றிய 2 லாரிகள் பறிமுதல்