நாமக்கல்லில் தீ விபத்து

நாமக்கல், ஏப்.19: நாமக்கல்  ரங்கநாதர்கோவில் மலை அடிவாரப்பகுதியில் குடிசை வீடுகள் மற்றும் வணிக  நிறுவனங்கள் உள்ளன. மலையடிவாரத்தில் உள்ள முட்புதரில் கொட்டப்பட்டு இருந்த குப்பை கழிவுகள்,  நேற்று மாலை 4 மணியளவில் திடீரென பிடித்து எரியத்தொடங்கியது. இந்த தீ அரைமணி நேரத்திற்கும் மேலாக எரிந்தது. இதனால் அப்பகுதியில் புகைமூட்டமாக காணப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், நாமக்கல்  தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.  மின் கம்பிகள்  உரசியதில் ஏற்பட்ட தீப்பொறியால் குப்பை கழிவுகள் தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து செயல்பட்டதால்,  அருகில் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடிக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது.

× RELATED திருவண்ணாமலையில் அக்னி முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை