×

திருச்செங்கோட்டில் 99 வயது காங்கிரஸ் தலைவர் வாக்களித்தார்

திருச்செங்கோடு, ஏப்.19:  இந்திய நாட்டின் முதல் நாடாளுமன்றம் எனப்படும் அரசியல் நிர்ணயசபையின் உறுப்பினராக இருந்தவர் டி.எம்.காளியண்ணகவுண்டர். திருச்செங்கோட்டை சேர்ந்த இவர் எம்பி, எம்எல்ஏ, எம்எல்சி ஆகிய பதவிகளையும், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் அமைச்சருக்கு நிகரான ஜில்லாபோர்டு தலைவர் பதவிகளையும் வகித்தவர். மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளராகவும்  இருந்தவர்.  இவர் நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில், திருச்செங்கோடு ஔவை கல்வி நிலைய வாக்குச்சாவடியில், தனது பேரன் செந்திலுடன் நடந்து வந்து வாக்களித்தார்.

Tags : Congress ,Tiruchengodu ,
× RELATED சொல்லிட்டாங்க...