இறையமங்கலம் பெருமாள் மலையில் சித்திரை தேர்த்திருவிழா

திருச்செங்கோடு, ஏப்.19: திருச்செங்கோடு அருகேயுள்ள இறையமங்கலம் பெருமாள் மலையில், இளையபெருமாள் பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோயிலில் சித்திரைத் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவத்தை காண திரளான பக்தர்கள் திரண்டனர். இதையொட்டி, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று (19ம் தேதி) இளைய பெருமாள் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் காலை 6 மணிக்கு திருத்தேரில் எழுந்தருள்கிறார். மீண்டும் மாலை 3.45 மணிக்கு தேர்கள் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தினசரி பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது. திருவிழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  மொளசி கண்ணங்குல கொங்கு நாட்டு வேளாளர் அறக்கட்டளை கவுரவ தலைவர் திருமலைக்கவுண்டர், தலைவர் இளையப்பன்,  துணைத்தலைவர்கள் சின்னுசாமி, பரமசிவம் ஆகியோர் செய்தனர்.

× RELATED இறையமங்கலம் பெருமாள் மலையில் சித்திரை தேர்த்திருவிழா