சுல்தான்பேட்டையில் பெண்கள் வாக்குச்சாவடி

புதுச்சேரி, ஏப். 19: புதுவையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக சுல்தான்பேட்டை காயிதே மில்லத் பள்ளி, லாஸ்பேட்டை குளுனி, முத்தியால்பேட்டை வாசவி இன்டர்நேஷனல், லாஸ்பேட்டை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நைனார்மண்டபம் அன்னை தெரசா மாதிரி பள்ளி, சத்தியாநகர் ஆதித்யா வித்யாஷ்ரம், காரைக்கால் அவ்வையார் பெண்கள் அரசு கல்லூரி ஆகியவற்றில் அமைக்கப்பட்டிருந்த  7 வாக்குச்சாவடிகளும் பெண்களால் நிர்வகிக்கப்பட்டது. இந்த வாக்குச்சாவடிகளில் அனைத்து தேர்தல் பணிகளையும் பெண்களே மேற்கொண்டிருந்தனர். பெண்கள் திரண்டு வந்து வாக்களித்தனர்.சுல்தான்பேட்டை காயிதே மில்லத் அரசு மேனிலைப் பள்ளியில் நிலை அலுவலர் முதல் வாக்காளர்கள் வரை என அனைவரும் பெண்களாகவே இருந்தனர். அங்கு இஸ்லாமிய பெண்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

× RELATED சேந்தமங்கலத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்