புதுவை நாடாளுமன்ற தேர்தலில் 81.57 சதவீத வாக்கு பதிவு

புதுச்சேரி,  ஏப். 19: புதுவை நாடாளுமன்ற தேர்தலில் 81.57 சதவீத வாக்குகளும், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் 77.66 சதவீத வாக்குகளும் பதிவானது. புதுச்சேரி மக்களவை தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி  சட்டமன்ற  தொகுதி இடைத்தேர்தல் ஏப்.18ம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. வேட்பு  மனு தாக்கல், பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மக்களவை தொகுதிக்கு 18 பேரும், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் 8 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.  அதன்பிறகு அரசியல் தலைவர்கள் தொடர்ந்து 15நாட்களாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஏப்.16ம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்  முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள்  பொருத்தப்பட்டு, ஸ்ட்ராங் ரூம்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இவையனைத்தும் மாநிலம் முழுவதும் உள்ள 970  வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.100  சதவீத வாக்குபதிவு இலக்கு என்பதால் அனைவரும் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் நாளான நேற்று (18ம்தேதி) சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதுவை மாநிலம் முழுவதும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி தொடர்ந்து நடந்தது. புதுச்சேரியில்  மொத்தம் 2 ஆயிரத்து 421  வாக்களிக்கும் இயந்திரம், 1147 கட்டுப்பாட்டு இயந்திரம், 1,209 விவிபாட்  இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. வாக்குப்பதிவின்போது பல்வேறு  பகுதிகளில் மின்னணு இயந்திரங்கள் பழுதானதால், அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது. வாக்காளர்கள் அனைவரும் காலையிலேயே வாக்குச்சாவடி  மையங்களில் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர்.

 தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் மட்டும் தலா 2  வாக்குகளை பதிவு செய்தனர். இதற்காக எம்பி தேர்தலுக்கு 2 இயந்திரங்களும்,  சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு இயந்திரமும் பயன்படுத்தப்பட்டது.

வாக்காளர் அடையாள அட்டை மற்றும் 11 ஆவணங்களை காண்பித்து பொதுமக்கள் வாக்களித்தனர். புதுச்சேரியில் 171, காரைக்காலில் 29, மாகேவில் 10, ஏனாமில் 12 பதற்றமான வாக்குச்சவாடிகளில்  கூடுதலாக பாதுகாப்பு  போடப்பட்டிருந்தது. தேர்தலில் துணை ராணுவப்  படையினர், காவலர்கள் உள்பட 7 ஆயிரத்து 617 அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். காலையில் விறு, விறுப்பாக நடந்த வாக்குப்பதிவு, கடும் வெயில் காரணமாக மதிய நேரத்தில் மிகவும் மந்தமாக நடந்தது. மாலை 3 மணிமுதல் மீண்டும் சூடுபிடித்தது. குறிப்பாக பெண்கள் கூட்டம் வாக்குச்சாவடிகளில் அதிகமாக இருந்தது. தொடர்ந்து மக்கள் திரண்டு வந்ததால், சில வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணியை தாண்டியும் வாக்குப்பதிவு நீடித்தது. மாலை 6மணிக்கு முன்பு வந்த 4 ஆயிரத்து 909 வாக்காளர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, ஒவ்வொருவராக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இரவு 8.30 மணிவரை வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. மொத்தமாக புதுச்சேரி மக்களவை தொகுதிக்கு 81.57 சதவீத வாக்குகளும், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் 77.66 சதவீத வாக்குகளும் பதிவானது. முன்னதாக வாக்குபதிவு நிறைவடைந்தவுடன் அனைத்து வாக்கு பதிவு இயந்திரங்களும்  அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, லாஸ்பேட்டை   மோதிலால் நேரு பாலிடெக்னிக், அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு எடுத்துச்   செல்லப்பட்டு, அங்குள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர்.  மே 23ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள்  அறிவிக்கப்படவுள்ளது. புதுவை மாநிலத்தில் மிகவும் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

பாக்ஸ் இயந்திரம் பழுதால் தாமதமான வாக்குபதிவு

முத்தியால்பேட்டை ராஜா பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குபதிவு இயந்திரம்   பழுதடைந்ததால் வாக்குபதிவு தாமதமானது. இதனால் வாக்களிக்க வந்த பொதுமக்கள்   நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பிறகு தாமதமாக  வாக்குபதிவு தொடங்கியது. இதேபோல் காமராஜர் நகரில் பூத் 10 பாகம் 20ல் காலை  7.35 மணிவரை வாக்குபதிவு தொடங்கவில்லை. மின்னணு இயந்திரம் பழுது காரணமாக  தாமதமாகவே வாக்குபதிவு தொடங்கியது. அதேபோல் வீராம்பட்டினம்  சிங்காரவேலர்  பள்ளி, கல்மண்டபம் அரசு உயர்நிலைப்பள்ளி, மடுகரை பெண்கள் உயர்நிலைப்பள்ளி,  நத்தமேடு அங்கன்வாடி, நெட்டப்பாக்கம் துவக்கப்பள்ளி ஆகிய  வாக்குச்சாவடிகளில் மின்னணு  இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதால்  வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியது. மாநிலம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட  இடங்களில் மின்னணு இயந்திர பழுது ஏற்பட்டதால், மாற்று இயந்திரங்கள் கொண்டு  வரப்பட்டு வாக்குபதிவு  தொடர்ந்து நடைபெற்றது. ஆனால் அங்கு மாலை 6 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு  நடைபெறும் எனவும், கூடுதலாக  நேரம் அளிக்கவில்லை எனவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

பாக்ஸ் ஓட்டுப்போட்ட பிரபலங்கள்

கவர்னர்  கிரண்பேடி சுகாதாரத்துறை  இயக்குனர் அலுவலகத்திலும், முதல்வர்  நாராயணசாமி பொதுப்பணித்துறை  கழிவுநீர் கோட்ட  அலுவலகத்திலும் ஓட்டு போட்டனர். என்ஆர் காங்கிரஸ் தலைவரும்,  எதிர்க்கட்சி தலைவருமான  ரங்கசாமி  திலாசுபேட்டையில் உள்ள அரசு ஆண்கள்  நடுநிலைப்பள்ளிக்கு மோட்டார்  சைக்கிளில் வந்து தனது வாக்கினை பதிவு  செய்தார்.சுசீலாபாய்  பள்ளி வாக்குச் சாவடியில் மாநில  தலைமை தேர்தல் அதிகாரி  கந்தவேலு தனது  மனைவியுடன் வந்து வாக்களித்தார். என்.ஆர் காங்கிரஸ்  வேட்பாளர்  டாக்டர் நாராயணசாமி பிள்ளைச்சாவடி சிறப்பு பள்ளியில் ஓட்டு  போட்டார். இதேபோல் சுயேட்சைகளும் ஆர்வமுடன்  வாக்களித்தனர். காங்கிரஸ்  வேட்பாளர்  வைத்திலிங்கம் மடுகரை அரசு தொடக்கப்பள்ளி வாக்குசாவடியில்  தனது வாக்கை  பதிவு  செய்தார். முன்னதாக அவர் காலை முதல் ஒவ்வொரு வாக்குச்சாவடியையும்  பார்வையிட்டார் மநீம வேட்பாளர் டாக்டர் எம்ஏஎஸ்  சுப்பிரமணியன் லாஸ்பேட்டை  தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டுபோட்டார்.  தட்டாஞ்சாவடி   இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வெங்கடேசன்  சுசீலாபாய்  அரசு  பள்ளி வாக்குசாவடியில் வாக்களித்தார். என்ஆர் காங்கிரஸ்  வேட்பாளர்   நெடுஞ்செழியன் திலாசுபேட்டை வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.

மே 23ம் தேதி விடை தெரியும்

துச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வைத்திலிங்கம் (கை சின்னம்),   என்ஆர் காங்கிரஸ் டாக்டர் நாராயணசாமி (ஜக்கு), மக்கள் நீதி மய்யம்  டாக்டர்  எம்ஏஎஸ் சுப்பிரமணியன் (டார்ச் லைட்), அமமுக தமிழ்மாறன் (பரிசு  பெட்டி),  நாம் தமிழர் கட்சி ஷர்மிளா பேகம் (கரும்பு விவசாயி) உள்ளிட்ட 18   வேட்பாளர்களும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி   இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் (உதயசூரியன்), என்ஆர் காங்கிரஸ்   ெநடுஞ்செழியன் (ஜக்கு), அமமுக முருகசாமி (பரிசு பெட்டி) உள்ளிட்ட 8 பேரும் களத்தில் உள்ளனர். இந்த 2 தேர்தலிலும் பிரதான கட்சிகளிடையே கடுமையான   போட்டி நிலவுவதால் வெற்றி வாகை சூடப்போவது யார் என்பதற்கு மே23ல் விடை   கிடைக்கும்புல்லவுட்புதுச்சேரியில் 2 ஆயிரத்து 421  வாக்களிக்கும் இயந்திரங்களும், 1147 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 1,209 விவிபாட்  இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டது.

Related Stories: