புளியமரம், அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த 2 பேர் பரிதாப சாவு

உளுந்தூர்பேட்டை, ஏப். 19:  உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் மகன் கிருஷ்ணமூர்த்தி(55). இவர் சம்பவத்தன்று புளியமரத்தில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த அவரை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி மனைவி ரத்தினாம்பாள் திருநாவலூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.   பேருந்தில் இருந்து விழுந்தவர் சாவு:  உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகர் மகன் சரவணன்(38). இவர் சம்பவத்தன்று இந்த கிராமத்திற்கு வந்த ஒரு அரசு பேருந்தில் வந்துள்ளார். பேருந்து நிற்பதற்குள் கீழே இறங்கியபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எடைக்கல் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: