சித்ரா பவுர்ணமி தரிசனம்

மயிலம், ஏப். 19: மயிலம் முருகர் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி திருக்கோயிலில், சித்ரா  பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு கோயில் வளாகத்திலுள்ள  பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், நவக்கிரக சுவாமிகளுக்கு அபிஷேகம், வழிபாடு நடந்தது. காலை 11 மணிக்கு பால், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் போன்ற நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  தொடர்ந்து இரவு 8 மணிக்கு கிரிவல பக்தர்களின் சார்பில் சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு 9 மணிக்கு உற்சவர் கிரிவல காட்சி நடந்தது. ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.

Advertising
Advertising

Related Stories: