தைலாபுரத்தில் கூத்தாண்டவர் தேர்பவனி

வானூர், ஏப். 19: வானூர் தாலுகா தைலாபுரம் கிராமத்தில் கூத்தாண்டவர் ரத உற்சவம் மற்றும் அழுகளம் நிகழ்ச்சி நடந்தது. தைலாபுரம் கிராமத்தில் திரவுபதியம்மன் மற்றும் கூத்தாண்டவர் கோயில் திருவிழா கடந்த வாரம் துவங்கியது. தொடர்ந்து திருவிழா நடந்து வந்தது. இதன் முக்கிய விழாவாக கூத்தாண்டவர் சுவாமிக்கு நேர்த்தி செய்து பக்தர்கள் நள்ளிரவில் மாங்கல்யம் கட்டும் நிகழ்ச்சியும், அதையடுத்து நேற்று மாலை கூத்தாண்டவர் ரதம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு ஐயனார் கோயில் அருகே உள்ள திறந்தவெளியில் அழுகளம் போகுதல் நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது அரவாணிகள் மற்றும் பெண்கள், ஆண்கள் என மாங்கல்யம், வளையல் ஆகியவை அணிந்து அங்கு ஊர்வலமாக வந்தனர். சுவாமிக்கு சோறு அறைதல் நடந்தவுடன் அனைவரும் மாங்கல்ய கயிற்றை அறுத்தும், வளையல்களை உடைத்தும் தங்களது நேர்த்தியை நிறைவேற்றினார்கள். விழாவில் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: