மாவட்டத்தில் ------ சதவீத வாக்குகள் பதிவு

விழுப்புரம், ஏப். 19:  விழுப்புரம் மாவட்டத்தில் அமைதியான முறையில் மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது. மாவட்டம் முழுவதும்----சதவீதம் வாக்குகள் பதிவானது. விழுப்புரம் மக்களவை தொகுதியில்---சதவீத வாக்குகளும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில்---சதவீத வாக்குகளும் பதிவானது.தமிழகம், புதுச்சேரியில் 38 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் கடந்த மாதம் 10ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனுதாக்கல் 19ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடந்தது. தொடர்ந்து அரசியல் கட்சிகளின் அனல்பறக்கும் பிரசாரம் முடிவடைந்த நிலையில் நேற்று மக்களவை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.  விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் இரண்டு மக்களவை தொகுதிகள் உள்ளன. செஞ்சி, மயிலம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் மட்டும் ஆரணி மக்களவை தொகுதியில் உள்ளது.விழுப்புரம் தொகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ரவிக்குமார், பாமக வேட்பாளர் வடிவேல்ராவணன் உள்ளிட்ட 13 பேர் போட்டியிட்டனர். கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் கவுதமசிகாமணி, அமமுக கோமுகி மணியன் உள்பட 24 பேர் போட்டியிடுகின்றனர். மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த மக்களவை தேர்தலையொட்டி 11 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,659 இடங்களில் 3,227 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை7 மணிக்கு வாக்குப்பதிவுகள் தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது. கோடை வெயிலுக்கு பயந்துகொண்டு காலை முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார்கள்.கிராமப்புறங்கள் மட்டுமின்றி நகர பகுதிகளிலும் காலை முதலே வாக்காளர்கள் குவிந்ததால் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.இதனிடையே வாக்குப்பதிவு தொடங்கி சில மணி நேரத்தில் விழுப்புரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. பெல்நிறுவன ஊழியர்கள் மூலம் சரி செய்யப்பட்டு பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கி நடந்தது. மாவட்டம் முழுவதும் 364 பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு அங்கு நடந்த வாக்குப்பதிவுகள் முழுமையாக ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவாறு கண்காணிக்கப்பட்டது. மேலும் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தடுக்க பக்கத்து அறையில் அமர வைக்கப்பட்டு 10 பேருக்கு மேல் இருந்தால் டோக்கன் கொடுத்து அவர்கள் ஓட்டுபோட அழைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் வீல் சேர்கள் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் வீல் சேர்கள் வைக்கப்பட்டிருந்தன. காலை விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு, பிற்பகல் 1 மணியளவில் 50 சதவீதத்தை தொட்டது. பின்னர் வெயில் காரணமாக மந்தமாக நடந்த வாக்குப்பதிவு 3 மணிக்குப்பிறகு மீண்டும் விறுவிறுப்பாக நடந்தது. காலை 9 மணி நிலவரப்படி விழுப்புரம் மக்களவை தொகுதியில் 12.60 சதவீதம் வாக்குகளும், கள்ளக்குறிச்சி தொகுதியில் 12.6 சதவீதமும் பதிவாகின. 11 மணி நிலவரப்படி விழுப்புரம் 23.02 சதவீதம், கள்ளக்குறிச்சி 23.65 சதவீத வாக்குகள் பதிவாகின. மாவட்டம் முழுவதும் 11 சட்டமன்ற தொகுதி

யிலும் 23.12 சதவீத வாக்குகள் பதிவாகின. பிற்பகல் 1 மணி நிலவரப்படி விழுப்புரம் 49.26 சதவீதமும், கள்ளக்குறிச்சி 49.15 சதவீத வாக்குகள் பதிவாகின. மாவட்டம் முழுவதும் 49.33 சதவீத வாக்குகள் பதிவாகின. 3 மணி நிலவரப்படி விழுப்புரம் 59.94 சதவீதமும், கள்ளக்குறிச்சி 59.84 சதவீத வாக்குகளும் பதிவாகின. மாவட்டம் முழுவதும் 11 சட்டமன்ற தொகுதியில் 59.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்குப்பதிவு முடிவான மாலை 6 மணியளவில் மாவட்டம் முழுவதும்----சதவீத வாக்குகளும், விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் --சதவீத வாக்குகளும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில்---சதவீதம் வாக்குகளும் பதிவாகியிருந்தன.

மக்களவைத் தேர்தலையொட்டி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் துணை ராணுவத்தினர் உள்ளிட்ட 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: